• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காமன்வெல்த் ஹாக்கி: அரையிறுதியில் இந்திய அணி தோல்வி

April 13, 2018 tamilsamayam.com

காமன்வெல்த் போட்டியின் பெண்கள் ஹாக்கி அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியிடம் 0-1 என இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 8வது நாளான இன்று பெண்களுக்கான ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது.

இதில் இந்திய அணி 0-1 என போராடித் தோற்றது. இந்த ஆடத்தின் பாதி வரையில் இரு அணிகளும் கோல் பாடவில்லை.இரு அணி வீராங்கனைகளும் சரிசமமாகப் போராடிய நிலையில்,3வது கால் பகுதியில் ஆஸ்திரேலிய அணி 37வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டு முன்னிலை பெற்றது.

இந்திய அணிக்கு 4வது கால் பகுதி ஆட்டத்தில் 48 மற்றும் 49வது நிமிடங்களில் இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன.ஆனால்,அதனை சரியாக பயன்படுத்தி கோல் போட தவறியதால் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

மேலும் படிக்க