கடந்த மூன்று நாட்களாக ஓசூரு, கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காமராஜ்நகர் ஏரி உடைந்ததால் அப்பகுதி முழுவதும் நீரில் மூழ்கியது.
இதில் ஏற்கனவே மூன்றுபேர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை மேலும் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது யார் எனத் தெரியாமல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்துகொண்டே இருந்ததால் ஓசூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு பிறப்பித்தார்.
அதே சமயம் நேற்று இரவு முதல் பெங்களூருவிலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் சாலைகள் முழுவதும் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் நீர் வீடுகளைச் சுற்றி நிற்பதால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் தற்போது வீரச்சந்திரா ஜங்ஷன் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களுக்குள் நீர் புகுந்துள்ளது. இதற்கு அருகில் உள்ள ஏரி நிரம்பியதே காரணம் எனக் கண்டறியப்பட்டு விரைவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்
கோவையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் மையம் துவக்கம்
அடிசியா நிறுவனத்தின் புதிய ஈக்கோ வேலி மனை பிரிவுகள் விற்பனை துவக்கம்
கோவை புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் -அனைத்து பிராண்டுகளிலும் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு