தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடந்த மாநில இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.
முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடந்தது.
இந்தப் போட்டியில், ஆண்கள் அணி தரப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தையும், சென்னை மாவட்டம் 2-ம் இடத்தையும், கோவை மாவட்டம் 3-ம் இடத்தையும் பிடித்தது. பெண்கள் அணி தரப்பில் மதுரை மாவட்டம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் மாவட்டம் 2-ம் இடத்தையும், கோவை மாவட்டம் 3-ம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசளிக்கும் விழா 28.07.2016 மாலை நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், முதல் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.50ஆயிரமும் என மொத்தம் ரூ.18லட்சம் மதிப்பிலான பரிசுகளுக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார் பாராட்டினார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு