• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யமுனா நதியில் வெள்ளப்பெருக்கு. விமானம் மூலம் மீட்கப்பட்ட கிராம மக்கள்

July 28, 2016 தண்டோரா குழு

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழை காரணமாக வட மாநிலங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யமுனா நதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில், அரியானா மாநிலம், யமுனா நகர் மாவட்டத்தில் யமுனா நதிக்கரை அருகே உள்ள மந்தவால் கிராமத்தைச் சேர்ந்த 8 விவசாயிகள் சிக்கிக்கொண்டனர்.

வேகமாக வந்த வெள்ளநீர் அவர்கள் இருந்த நிலப்பரப்பைச் சுற்றிக்கொண்டது. வெள்ளத்தின் வேகமும் சுழற்சியும் அதிகமாக இருந்ததால், படகு மூலம் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

dd

இதையடுத்து சில மக்கள் வெள்ளம் சூழ்ந்த யமுனா நதிக்கரையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானப்படை மூலம் தவித்துக் கொண்டிருந்த 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

மேலும் படிக்க