• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயணச்சீட்டு பரிசோதனைகளில் சிறப்பாகச் செயல்பட்ட சேலம் கோட்டத்திற்கு தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் பாராட்டு

July 28, 2016 தண்டோரா குழு

ரயில்வேயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதால் ரயில்வேக்கு வருவாய் இழப்பைச் சரிசெய்ய தெற்கு ரயில்வே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

சேலம் கோட்டமும் திடீர் சோதனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளுடன் பயணச்சீட்டு இல்லாமலும், பார்சல்களை சரியாக புக்கிங் செய்யாமலும் எடுத்துச் செல்வதன் மூலமும் ஏற்படும் வருவாய் இழப்பைச் சரி செய்து வருகிறது.

இதற்காக சேலம் கோட்ட பயணச்சீட்டு பரிசோதகர்கள் குழு தங்களது வழக்கமான ரயில்களில் பயணித்து முன்பதிவு பயணச்சீட்டுகளை சோதிக்கும் பணியுடன் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களை சோதனை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இது தவிர சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளும் தொடர்ந்து ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களில், 2016 ஏப்ரல் முதல் ஜூன் வரை, சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு இத்தகு பரிசோதனைகள் மேற்கொண்டு 82,98,529 ரூபாயை டிக்கட் மற்றும் அபராதத் தொகையாக வசூல் செய்துள்ளது.

பயணச்சீட்டு இல்லாத பயணம் செய்தோர் : 18,607.

பார்சல்களை புக்கிங் செய்யாமலும் எடுத்துச் சென்றவர்கள்: 843.

மொத்த அபராதம் மற்றும் பயணச்சீட்டு வசூல் (ரூபாயில்) : 82,98,529.

சேலம் கோட்ட பயணச்சீட்டு பரிசோதகர் எஸ்.பத்மாவதி, நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் தாண்டி கடந்த மூன்று மாதங்களில் 9,06,580 ரூபாய் வசூல் செய்ததை பாராட்டி தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜீத் சக்சேனா அவர்கள் 5,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளதுடன் இதர பயணச் சீட்டுப் பரிசோதகர்களுக்கும் 10,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்க ஆணையிட்டுள்ளார்.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா அவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் சேலம் கோட்டம் பயணச்சீட்டு பரிசோதனையில் சிறப்பாகச் செயல்பட்டு தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதாகப் பாராட்டியுள்ளார்.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சிறப்பாக இத்தகு சாதனை படைத்ததற்கு சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் விஜு வின் அவர்களையும் இதர வணிகவியல் துறை பயணச்சீட்டு பரிசோதகர்களையும் பாராட்டினார்.

மேலும் படிக்க