• Download mobile app
23 Oct 2025, ThursdayEdition - 3543
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடித்த மதுவுக்கு பணம் இல்லாததால் ஆடைகளைக் கொடுத்துவிட்டு நிர்வாணமாகச் சென்ற வாலிபர்

July 28, 2016 தண்டோரா குழு

குடித்த மதுவுக்கு பணம் இல்லாத காரணத்தால் தனது ஆடைகளைக் கொடுத்துவிட்டு நிர்வாணமாகச் சென்ற வாலிபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசைச் சேர்ந்த பிரெரோவ் நகரில் ஒருவர் கடந்த திங்கள்கிழமையன்று அருகிலிருந்த மதுபான நிலையத்திற்குச் சென்று உள்ளார். அங்கே சென்ற அவர் இஷ்டம் போல மதுஅருந்தி உள்ளார். பின்னர் பில் தொகையை கொடுக்க முயன்ற போது தான் பணத்தை வீட்டில் மறந்துவிட்டு வந்தது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது.

இது குறித்து மதுபான நிலையத்தின் ஊழியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் சொன்னதை ஏற்காத ஊழியர், பணத்தைக் கொடுத்துவிட்டு போ அல்லது ஆடைகளைக் கழற்றி வைத்துவிட்டு பணத்தை கொடுத்துவிட்டு வாங்கிச் செல் என்று கூறியுள்ளார்.

இதனால் வேறு வழியின்றி தனது ஆடைகளைக் கழற்றி கொடுத்துவிட்டு நிர்வாணமாக அங்கு இருந்து வெளியே சென்று உள்ளார். இதனை அந்தச் சாலை வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால், இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்த இளைஞர் அருகிலிருந்த பாரில் மது அருந்திக் கொண்டிருந்த அவருடைய நண்பரிடம் பணம் பெற்றுக் கொண்டு அதனை அவர் மது அருந்திய இடத்தில் கொடுத்துவிட்டு பின்னர் அவர் தனது ஆடைகளைப் பெற்று அதை அணிந்து கொண்டு சென்று உள்ளார்.

இந்த அதிர்ச்சியான காட்சிகள் அந்த பாரின் அருகில் உள்ள சாலையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க