• Download mobile app
23 Oct 2025, ThursdayEdition - 3543
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்து மனைவிக்கு அவரது முறைப்படி இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் கணவர்

July 28, 2016 தண்டோரா குழு

சாதி,மதம் என மனிதர்களுக்கிடையே நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து வரும் வேளையில் சாதி மதங்களை விடக் காதலுக்கு அன்பு அதிகம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக ஒரு சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் லியாகத்அலிகான்(72). இவர் 36 ஆண்டுகளுக்கு முன்பு கிருபா தேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

லியாகத் அலிகான் ஏற்கவே திருமணம் ஆனவர், இருப்பினும் கிருபா தேவி லியாகத் குடும்பத்துடனே வசித்து வந்துள்ளார். கிருபா தேவிக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால், லியாகத் அலிகானின் முதல் மனைவியின் குழந்தைகளை தன் குழந்தைகள் போல் வளர்த்து வந்துள்ளார்.

என்னதான் முஸ்லீம் கணவருக்கு மனைவியாக இருந்தாலும், கடைசி வரை இந்து மதத்தையே கிருபாதேவி பின்பற்றிவந்துள்ளார். மேலும், லியாகத் அலிகான் குடும்பத்தினரும் அனைத்து இந்து பண்டிகைகளை கொண்டியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கிருபா தேவி மரணமடைந்தார். இதனையடுத்து அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளது. கடைசி வரை இந்து முறைப்படியே வாழ்ந்த தனது காதல் மனைவி கிருபா தேவியின் இறுதிச் சடங்கை இந்து முறைப்படியே முன்னின்று நடத்தியுள்ளார் லியாகத் அலிகான். மேலும், கிருபா தேவியின் சிதைக்கு அவரே தீ மூட்டியும் உள்ளார்.

மதத்தாலும், சாதியாலும் பிரிந்து வாழும் மனிதர்கள் மத்தியில் காதலுக்கு மதங்கள், சாதிகள் கிடையாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

மேலும் படிக்க