• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்தி சிதம்பரத்தை ஏப்.16 வரை கைது செய்ய சிபிஐக்கு தடை

March 24, 2018 தண்டோரா குழு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை ஏப்.16 வரை கைது செய்ய சிபிஐக்கு தடை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ.10 லட்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரதின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ போலீசார்  கைது செய்தனர்.

ஏற்கெனவே 12 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை 12 நாட்களுக்கு அதாவது வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் டில்லி திஹார் சிறையில் அடைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும்,ரூ.15 லட்சத்தை பிணயத்தொகையாக செலுத்தவும்,வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கிய டெல்லி சிபிஐ நீதிமன்றம்,அவரை ஏப்.16 வரை கைது செய்யவும் சிபிஐக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க