March 21, 2018
தண்டோரா குழு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று(மார்ச்21)கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் பெண் அரசு ஊழியர்களிடம் தரைகுறைவாக பேசியுள்ளார்.இதற்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று வேலூர்,விழுப்புரம்,தர்மபுரி,காஞ்சிபுரம்,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து கோவை மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர்க்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனங்களை தெரிவித்தனர்.