March 21, 2018
தண்டோரா குழு
கோவை வனத்துறை சார்பாக உலக வன நாளை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது
கோவையில் உள்ள தமிழ்நாடு் வன உயர் பயிற்சியகத்தில் உலக வன நாளை முன்னிட்டு,வனக்கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்திய வனமரபியல் நிறுவன இயக்குனர் மோகித் கெரா, மற்றும் வனத்துறை அதிகாரிகள், வன ஆர்வலர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதில் பேசிய, மோகிய் கெரா,
நாட்டில் நிலவும் காலநிலை மாறத்திற்கு காடுகளே காரணம் எனவும்,வளமான நகரங்களுக்கு வனங்களே ஆதரம் எனவும் தெரிவித்தார்.உலகில் உள்ள 75% நீர் ஆதாரத்திற்கு காடுகளே காரணம் எனவும் தெரிவித்தார்.ஒரு மரம்,ஓர் ஆண்டிற்கு 13 முதல் 14 கிலோ மாசை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது, எனவே் தூய்மையான நகரம் உருவாக்க, நகரங்களில் 40% சதவிகிதம் மரங்கள் இருக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும்,இந்நிகழ்ச்சியில் வேட்டை தடுப்பு காவலர்களுக்க பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.