March 21, 2018
தண்டோரா குழு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான பெரும்பாலான தகவல்கள் தவறானது என்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், 2015 மற்றும் 2016ம் ஆண்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் தான் வீடியோ எடுத்ததாகவும், அனைத்து வீடியோக்களும் ஜெயலலிதாவின் அனுமதி பெற்றே எடுக்கப்பட்டதாகவும் சசிகலா விளக்கம் அளித்துள்ளதாகவும், மேலும்,செப்.22-ம் தேதி இரவு 9.30 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா தவறி விழுந்ததாகவும், தம்மிடம் உதவி கேட்டதாகவும் உடனடியாக டாக்டர் சிவகுமார் உட்பட 2 பேர் கொண்ட மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்ததாகவும் சசிகலா தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து நீதிபதி ஆறுமுகசாமி கூறுகையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான பெரும்பாலான தகவல்கள் தவறானது என்று தெரிவித்துள்ளார்.