• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சாதனையில் இணைந்த முதல் இந்தியர் தினேஷ் கார்த்திக்

March 20, 2018 tamilsamayam.com

நேற்று நடந்த முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அபார பேட்டிங்கால் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது..

இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடத்தியது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் விளையாடின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின.

இந்த போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியாவின் கனவை தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டத்தால் நினைவாக்கினார். கடைசி ஒரு பந்துக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் கார்த்திக் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

தினேஷ் கார்த்திக் மொத்தம் எதிர் கொண்ட 8 பந்தில் 3 சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் விளாசி 28 ரன்கள் குவித்தார். டி20 போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய முதல் வீரர் என்ற பெருமையை கார்த்திக் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க