• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

March 19, 2018 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கிடுவதிற்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும்,அரசு மருத்துவர்களுக்கு பட்டய மேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(மார்ச் 19)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கால நேரம் உட்பட ஒரே மாதிரியான வேலைப்பளுக்கள் இருந்தாலும்,மத்திய அரசின் மருத்துவர்களுக்கு மட்டும் அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும் தங்களுக்கும் அவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட கோரிக்கை வைத்தனர்.

அதே போல், மருத்துவ பட்டயமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 % இடஒதுக்கீடை வழங்கிட வேண்டும் என்றும்,இந்த இட ஒதுக்கீட்டின் ரத்தால் அரசு மருத்துவர்களாக பணிபுரிவர்களின் எண்ணிக்கை சரிசமமாக குறையும் என்றும்,விளிம்பு நிலை மக்களுக்கு இதே போன்ற மருத்துவம் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்றிட வலியுறுத்தி வரும் 23 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க