• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

 அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியாரின் மொத்த உருவம் ஜெயலலிதா – டிடிவி தினகரன்

March 17, 2018 தண்டோரா குழு

அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியாரின் மொத்த உருவம் ஜெயலலிதா என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

கடந்த 15ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி  தினகரன் தனது அமைப்பிற்கான பெயரையும், கொடியையும் அறிவித்தார். இதற்கிடையில் இன்று நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் அறிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற  பெயரில் தனக்கு உடன்பாடு இல்லை. அண்ணாவும் , திராவிடமும் இல்லாத  டிடிவி  அணியில் நீடிக்க விரும்பவில்லை.நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை. இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன்,

ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.  அண்ணாவையும், திராவிடத்தையும் நான் அவமதித்தது போல் நாஞ்சில் சம்பத் பேசி வருகிறார். அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியாரின் மொத்த உருவம் ஜெயலலிதா.  தேர்தல் ஆணையத்தில் கொடுத்த கட்சி பெயரில் திராவிடம் உள்ளது.  பெயர் காரணத்தால் நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது என்று தினகரன் கூறினார்.

மேலும்,  தேர்தல் ஆணையத்தில் கட்சிக்காக 3 பெயர்களை கொடுத்ததாகவும், அதில் ஒரு பெயரை தேர்வு செய்ததாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் டிடிவி.தினகரன் கூறினார். மேலும் தொண்டர்கள் என்னை தலைவராக உருவாக்கி வருகின்றனர் என்றார்.

மேலும் படிக்க