• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்து பத்திரிகை நிருபர்களையும் சகோதர, சகோதரிகளாகவே பார்க்கிறேன் – விஜயபாஸ்கர்

March 16, 2018 தண்டோரா குழு

பெண் செய்தியாளரை அழகாயிருக்கீங்க என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டம் முடிந்து வெளியே வந்து போது,எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க அவரிடம், பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.ஆனால் அவர், கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களது ஸ்பெக்ஸ் அழகாக உள்ளது’  எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில்,அமைச்சர் விஜயபாஸ்கர் பெண் செய்தியாளரிடம் பேசும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்நிலையில்,இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.அனைத்து பெண் பத்திரிகையாளர்களையும் சகோதரிகளாகவே நான் பார்க்கிறேன்அரசியல் கேள்விகளை தவிர்க்கவே நான் முற்பட்டேன்  யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க