• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பா.ஜ.க சார்பில் இலவச இரத்த பரிசோதனை முகாம்

March 15, 2018 தண்டோரா குழு

கோவையில் குனியமுத்தூர் மண்டலம் சார்பில் இலவச இரத்த பரிசோதனை முகாம் இடையர்பாளையம் மைதானத்தில் இன்று(மார்ச் 15)நடைபெற்றது.

பா.ஜ.கவின் 93 வது டிவிஷன் குனியமுத்தூர் மண்டல் சார்பில் நடைபெற்ற இலவச இரத்த பரிசோதனை முகாமில் இரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவற்றின் அளவீடுகள் மற்றும் இரத்த அழுத்தம், உயரம், எடை மற்றும் கல்லீரல் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.இந்த பகுதியில் ஆரம்பித்து கோவை மாநகரம் முழுவதும் படிப்படியாக இந்த முகாம் நடத்தப்படும் என்று கோவை மாநகர மாவட்ட மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் கலைச்செல்வி மூர்த்தி தெரிவித்தார்.மேலும், இந்த நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி தலைவி கீதா வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் படிக்க