• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பெரியதடாகம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு

March 15, 2018 தண்டோரா குழு

கோவை பெரியதடாகம் அருகே 10 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானையை வேட்டைதடுப்பு காவலர்கள் மீட்டு இன்று(மார்ச் 15)அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

கோவை பெரியதடாகம் அனுபாவி சுப்பிரமணியர் கோவில் அருகே உள்ள 10 அடி உயர தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க இன்று அதிகாலை இரு குட்டிகள் உள்ளிட்ட 5 யானைகள் கொண்ட கூட்டம் வந்தது.அதில்  பிறந்து 1 மாதமே மாத யானை குட்டி தீடீரென தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது.குட்டியானையை மீட்க முடியாமல் தாய் யானை பிளிறியது. சத்தம் கேட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குட்டியானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மற்ற யானைகள் வனத்துறையினரை குட்டியானையின் பக்கம் நெருங்க விடாமல் தடுத்தன. எனினும் மற்ற யானைகளை விரட்டிவிட்டு ஜே.சி.பி இயந்திர உதவியுடன் தண்ணீர் தொட்டியில் இருந்து யானை குட்டியை மீட்ட  வனத்துறையினர் யானைகுட்டியை அதன் கூட்டத்துடன் சேர்த்து வனத்துக்குள் அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க