• Download mobile app
19 Apr 2026, SundayEdition - 3721
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து, 7 குழந்தைகள் பலி

July 25, 2016 தண்டோரா குழு

வட இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் படோஹி என்னும் இடத்திற்கு அருகில் இருக்கும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 குழந்தைகள் பலியாகினர், 12 குழந்தைகள் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படோஹி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டெண்டர் ஹார்ட் பப்ளிக் ஸ்கூல் வாகனத்தின் மீது அந்த வழியாக வந்த அலகாபாத், வாரணாசி பயணிகள் ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த 19 குழந்தைகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதை அறிந்த போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வந்து சேர்ந்த அவர்கள் காயம் அடைந்த குழந்தைகளை பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான ஜீவன்தீப், ஜீவன்தாரா மற்றும் காயன்பூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையின் போது, ரயில் வருவதற்கான எச்சரிக்கை சிக்னல் போடப்பட்டும் தண்டவாளத்தை கடக்க வேன் டிரைவர் முயற்சி செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க