• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே மத்திபாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் ஆண் யானை உயிரிழப்பு

March 14, 2018 தண்டோரா குழு

கோவை ஆலாந்துறை அடுத்த கரடிமடை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது.இந்த யானைகள் உணவு தேடி ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.மேலும் தற்போது வனப்பகுதிக்குள் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் தண்ணீர், மற்றும் உணவு தேடி ஊருக்குள் நாள்தோறும் வர துவங்கியுள்ளது.

இந்நிலையில் பேருர் அடுத்த மத்திபாளையத்தில் சந்திரன் என்பவர் தோட்டத்தில் அரசாணிக்காய் பயிரிட்டுள்ளார்.அதனை சாப்பிட சுமார் 12 வயது மதிக்க தக்க ஆண்யானை செவ்வாய்க்கிழமை இரவு வந்துள்ளது.இதனை தொடர்ந்து அந்த யானை தோட்டத்தில் மயங்கி விழுந்து இறந்துள்ளது.புதன்கிழமை காலை தோட்டத்திற்கு சென்ற சந்திரன் யானை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த மதுக்கரை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானை இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் வனத்துறை மருத்துவரை கொண்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.யானை இறந்த இடம் அருகே மின்சார வேலி உள்ளதால் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க