• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு கல்லூரி பேராசிரியர்கள் மிகவும் சிறந்த ஆசிரியர்கள் – திருப்பூர் மாவட்ட நீதிபதி

March 13, 2018

கோவை அரசுக் கலை கல்லூரியில் இன்று (13.3.2018) “கணித மன்ற விழா” நடைபெற்றது.

கோவை அரசுக் கலை கல்லூரியில் கணிதவியல் துறை சார்பாக “கணித மன்ற விழா” கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் P.பொன்னுசாமி வரவேற்புரையாற்றினார்.கல்லூரி முதல்வர் முனைவர் S. நளினி தலைமையுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட நீதிபதி  திரு.முகமது ஜியாபுதின்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“அரசு கலை கல்லூரி ஆசிரியர்களே சிறந்த ஆசிரியர்கள். அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக, மருத்துவராக, வழக்குரைஞராக, நீதியாக வருவர்கள். என்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் பெரும்பாலானோர் அரசு கல்லூரியில் படித்தவர்களே,” என்றார்.

மேலும்,கோவை அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் திரு. A.முரளிதரன், நேரு கல்விக் குழு இயக்குநர் சிறப்பு விருந்தினரைப் பாராட்டிப் பேசினார். திரு.சூரிய நாராயணன் முன்னாள் ஆங்கிலத் துறைத் தலைவர், அரசு சட்டக் கல்லூரி முதல்வர்,மாணவர்களை வாழ்த்தி நிகழ்ச்சியினைச் சிறப்பித்தார்.இவ்விழா நிறைவில் கணிதமன்றச் செயலாளர் மணிவண்ணன் நன்றியுரை வழங்கினார்.

 

மேலும் படிக்க