• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தாரதது ஏன் ? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

March 9, 2018 தண்டோரா குழு

தமிழக அரசு, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தாரதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு பிரிவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்த சென்னை உயர்நீதிமன்றம், 21 வழிமுறைகளையும் நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தின் 21 உத்தரவுகளில் எந்தெந்த உத்தரவுகளை செயல்படுத்த முடியும் என்பது தொடர்பான அறிக்கை ஒன்றை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இதையடுத்து அறிக்கையை பார்த்த நீதிபதி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சிலை கடத்தலை தடுக்கும் உத்தரவை செயல்படுத்தாதது ஏன்? மேடை அலங்காரத்திற்கு பல கோடி செலவு செய்யும் அரசு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு போதிய வசதிகள் செய்யாதது ஏன்?  என கேள்வி எழுப்பினார். மேலும், உத்தரவுகளை செயல்படுத்தாவிட்டால், தலைமை செயலரை தலைமை செயலரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடுவோம்.    மேலும், அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் நீதிமன்றம் உற்றுநோக்கி வருவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். இதுவரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இயங்கி வருவதை சுட்டிக் காட்டிய நீதிபதி 8 மாதங்கள் ஆகியும் நீதிமன்ற வழிமுறைகள் ஒன்றைக் கூட அரசு அமல்படுத்தவில்லை என்றார்.

இதனையடுத்து 21 உத்தரவுகளை அமல்படுத்துவது தொடர்பாக அரசு பதிலளிக்க இறுதி கெடு அளித்து வழக்கை மார்ச் 23 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க