• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல – கார் ஓட்டுநர் ஐயப்பன்

March 8, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல என அவரது கார் ஓட்டுநர் ஐயப்பன் கூறியுள்ளார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் இன்று காலை ஆஜரானார்.  விசாரணைக்கு பிறகு கார் ஓட்டுநர் ஐயப்பன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், 

ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என எனக்கு தகவல் வந்தது. உடனடியாக ஜெயலலிதாவுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு போயஸ் கார்டன் சென்றேன். முதலில் மருத்துவமனைக்கு செல்ல ஜெயலலிதா மறுத்ததாக தகவல் கிடைத்தது. மயங்கிய பிறகே ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்ட மறுநாள் சுயநினைவேடு தான் இருந்தார். ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல.  ஜெயலலிதா இறந்த பிறகு கால் கட்டை விரல்களை கட்டுவது உள்ளிட்ட இறுதிச்சடங்குகளை செய்தேன். நவ. 19ம் தேதி வார்டுக்கு மாற்றும் போதும் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும் ஜெயலலிதாவை சசிகலா நன்றாக கவனித்து கொண்டதாகவும் கார் ஓட்டுநர் ஐயப்பன் கூறினார்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்நாளில் சிகிச்சை முடிந்து மருத்துவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன். 75 நாளும் மருத்துவமனையில் தான் இருந்ததாகவும், ஆனால் 3 முறை தான் ஜெயலலிதாவை பார்த்ததாகவும் கார் ஓட்டுநர் ஐயப்பன் கூறினார்.

மேலும் படிக்க