• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற விபத்தில் 4 பேர் பலி

July 23, 2016 வெங்கி சதீஷ்

திருவண்ணாமலையில் இருந்து திருக்கோயிலூர் செல்லும் சாலையில் உள்ள வெரையூர் என்ற இடத்தில் இன்று காலை பழுதாகி நின்ற ஒரு தனியார் சுற்றுலா பேருந்தை அதன் ஓட்டுனர் பழுது நீக்கும் வேளையில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேருந்தின் பின்புறம் இருந்து வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்து மீது வேகமாக மோதியது.

இதில் பேருந்தில் இருந்த நான்குபேர் உயிரிழந்தனர். மேலும் 25பேர் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருவண்ணாமலை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேருந்தில் வந்த அனைவரும் தருமபுரி மாவட்டம் பாலகோடு பகுதியில் உள்ள புக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், திருவண்ணாமலைக்குச் சுற்றுலா வந்தபோது, பேருந்து பழுதாகி நின்றதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து வழக்கு பதிவுசெய்து லாரி ஓட்டுனரை தேடிவருகின்றனர். ஒரே ஊரைச்சேர்ந்த நான்குபேர் சுற்றுலா சென்றபோது உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க