• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அலட்சியத்தால் பலியான லாரி ஓட்டுனர்

July 23, 2016 வெங்கி சதீஷ்

காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி கரை பகுதியில் உள்ள இந்திராநகரில் கட்டுமானப்பணிக்காக மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று வீட்டின் அருகே மணலைக் கீழே கொட்டுவதற்காகப் பின்புற பக்கெட் அமைப்பை ஹைட்ராலிக் மூலம் தூக்கியுள்ளார்.

முறைப்படி கிளீனர் உடனிருந்து பார்த்து சொல்ல வேண்டிய வேலையை கிளீனர் இல்லாமலேயே செய்ததால் லாரியின் மேலே சென்ற மின்சாரக் கம்பியை கவனிக்க மறந்துவிட்டார் ஓட்டுனர் ஏழுமலை(37).

இதையடுத்து லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து ஓட்டுனர் உயிரிழந்தார். மேலும் லாரியின் நான்கு சக்கரங்களும் அதிக சத்தத்துடன் வெடித்ததில் அருகில் உள்ளவர்கள் பயந்து வந்து பார்த்தபோதுதான் அசம்பாவிதம் நடைபெற்றது தெரிந்துள்ளது.

இதையடுத்து மின்சார வாரியத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் படிக்க