• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கம்பு புட்டு

February 23, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

கம்பு – ஒரு கப்

உப்பு – தேவைகேற்ப

நெய் – ஒரு தேகரண்டி

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

சர்க்கரை – தேவைகேற்ப

தேங்காய் துருவல் – கால் கப்

முந்திரி – ஒரு டீஸ்பூன்

திராட்சை – ஒரு டீஸ்பூன்

பிஸ்தா – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை, பிஸ்தா போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் கம்பு மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு, அதில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும்.பிறகு, இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் ஆவி கட்டவும். பின், எடுத்து  ஒரு கிண்ணத்தில் போட்டு உதிர்த்து  கொள்ளவும்.

பிறகு, அதில் ஏலக்காய் தூள், நெய் சிறிதளவு, தேங்காய் துருவல், சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

 

மேலும் படிக்க