• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஏல சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி

February 20, 2018 தண்டோரா குழு

கோவையில் ஏல சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை சங்கனூர் பகுதியை சேர்ந்த தம்பதியர்கள் சுனில்குமார் மற்றும் பிந்து.இவர்கள் அதே பகுதியில் ஏல சீட்டு நடத்தி வருகின்றனர் .ஒரு லட்சம்,இரண்டு லட்சம்,நான்கு லட்சம் மற்றும் நான்கரை லட்சம் என பல்வேறு விதமான தொகையிலான ஏல சீட்டுகள் நடத்தி வரும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவர்களிடம் பணம் செலுத்தி சீட்டு கட்டி வந்துள்ளனர். இதனிடையே ஏல சீட்டிற்கான காலம் முடிவடைந்தும் உறுப்பினர்களுக்கு பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

மேலும் பணம் கேட்டு வீட்டிற்கு செல்வோரை தகாத வார்த்தைகளால் பேசுவதும் தாக்க முற்படுவதுமாக இருந்ததையடுத்து பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட சிலர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே மோசடி தொடர்பாக மாநகர குற்றப்பிரிவில் உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பலர் காவல்துறையில் புகார் அளிக்க தயங்குவதாகவும் கூறினர்.

மேலும் படிக்க