• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காண்ட்ராக்ட் வேலை செய்த பணத்தைக் கொடுக்க லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது.

July 20, 2016 வெங்கி சதீஷ்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பல்வேறு பணிகளைச் செய்து வருபவர் ஆனந்தன். இவர் கடந்தமுறை ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டார். அதற்காக நகராட்சி இவருக்கு சுமார் 3 லட்சம் ரூபாய்வரை கொடுக்கவேண்டியது இருந்தது.

இந்நிலையில் முதல்கட்டமாக 70 ஆயிரம் ரூபாயைக் கொடுத்த நகராட்சி ஆணையாளர் மல்லிகை, மீதி பணத்தை தரவேண்டும் என்றால் லஞ்சம் தரவேண்டும் எனப் பேரம் பேசியுள்ளார்.

பின்னர் முதல்கட்டமாக 5 ஆயிரம் ரூபாயைத் தருமாறு வற்புறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஆனந்தன் இது குறித்து கோவை லஞ்சஒழிப்புத்துறைக்கு அத்தகவல் கொடுத்தார்.

பின்னர் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுக்களைப் பெற்றுச்சென்ற ஆனந்தன் இன்று காலை மல்லிகையிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு டி.எஸ்.பி முருகேசன் தலைமையில் மறைந்திருந்த லஞ்சஒழிப்பு காவல்துறையினர் மல்லிகையை கையும் களவுமாகப் பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்த லஞ்சஒழிப்பு காவல்துறையினர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க