சர்ச்சையான வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த பாகிஸ்தான் மாடல் அழகி குவாண்டீல் பலூச் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தினால் அந்த அணியின் கேப்டன் அஃப்ரிடிக்கு தன்னுடைய நிர்வாண வீடியோவை அனுப்பி வைப்பேன் என்று பாகிஸ்தான் மாடல் அழகி குவாண்டீல் பலூச் அறிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பு செய்தித்தாள்களிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இதனால் கோபம் கொண்ட அவர் பாகிஸ்தான் வீரர்களைத் திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
பின்னர், ஒரு படி மேலே சென்று இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலியைக் காதலிப்பதாக அறிவித்தார். தன்னுடைய ஒவ்வொரு அறிவிப்புகளின் மூலமும் ஊடகங்களின் கவனத்தை பெற்ற அவர் சர்ச்சையாக எதையாவது செய்துகொண்டே இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மேலும், சமீபத்தில் இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த மதகுரு ஒருவருடன் செல்ஃபி எடுத்து அதனைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதன் மூலம் அந்த மதகுரு மத நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், முல்தானில் உள்ள அவரது வீட்டில் குவான்டீல் பலூச் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். குவான்டீலை அவரது சொந்த சகோதரரே சுட்டுக்கொன்றதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மாடலிங் தொழிலை விட்டுவிடுமாறு அவர் கூறியதாகவும், குவான்டீல் மாடலிங்கை விடாததாலும் அவரைச் சுட்டுக்கொன்றதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் சுட்டுக் கொல்லப்படவில்லை என்ற செய்தி தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, குவாண்டீசின் சகோதரர் வாசீம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், குடும்ப கவுரத்தை பாதுகாக்கவே தன் தங்கையைக் கொலை செய்ததாகவும் அவளுடைய செயல்பாடுகள் எங்கள் குடும்ப கவுரத்தைக் களங்கப்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், அவளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்தேன். மாத்திரையை உட்கொண்ட அவர் மயங்கி விழுந்தாள். பிறகு அவளின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.
அதே சமயம், தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றும், தன்னுடைய அலைபேசியில் தனக்கு மிரட்டல் வருவதாகவும், தன்னுடைய வீட்டில் பாதுகாப்புக்கான கருவிகள் இல்லாததாதல் தனக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் சில நாட்களுக்கு முன், இஸ்லாமாபாத் உள்துறை அமைச்சராக இருந்த மத்திய புலனாய்வு ஆணைய(FIA) இயக்குனர் ஜெனரல் அவர்களுக்கு குவாண்டீல் பலூச் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்