• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தொடர்ந்து புகார் வந்தால் தேர்தல் ரத்து குறித்து முடிவு!

December 16, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் தொடர்ந்து பணப்பட்டுவாடா குறித்து புகார்கள் வந்தால் தேர்தலை நிறுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என ஆர்.கே.நகர் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர் பத்ரா தெரிவித்துள்ளார்.

மத்திய வருவாய்த்துறை அதிகாரியான பத்ராவை, ஆர்.கே.நகர் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளராக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதையடுத்து, அவர் விமானம் மூலம் சென்னை வந்தார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் கூறினார். மேலும், தேர்தல் ஆணைய விதிமுறைகளை முழுமையாக பின்பற்றியே தேர்தல் நடத்தப்படும்.தேர்தல் தொடர்பாக பொதுவான புகார்கள் மட்டுமே தற்போது வந்துள்ளதாகவும் கூறினார். அப்போது, தொடர்ந்து பணப்பட்டுவாடா புகார்கள் வந்தால் தேர்தல் நிறுத்தப்படுமா என்று நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பத்ரா, அப்போது அதற்கான முடிவெடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க