December 16, 2017
தண்டோரா குழு
நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்தரம் இருந்தால் வழக்கு பதியலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் திருப்பதியில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என்று சந்திரசேகர் பேசியதாக இந்து முன்னணி நிர்வாகி புகாரளித்தார். இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எஸ்.ஏ. சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்தரம் இருந்தால் வழக்கு பதியலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.