December 16, 2017
தண்டோரா குழு
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 19 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவான ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்தது. ஏராளமான மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் பலர் பலியாகினர். இதற்கிடையில், புயல் நேரத்தில் கடலில் மீன் பிடிக்க சென்ற கேரள மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். இதனால் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது.
இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளார் என்றும் பிரதமரின் வருகை உறுதியான நிலையில் பயண திட்ட விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.