• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த நடிகர் விஷால்

December 9, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றிதற்கு நடிகர் விஷால் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றக்கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றி புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் எனது மனு பரிசீலனையின் போது எழுந்த சர்ச்சைகளை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்ற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதை ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருதுகிறேன். நான் தேர்தலில் நிற்கிறேனோ இல்லையோ, இதன் மூலம் இனியாவது ஆர்.கே.நகரில் நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் நானும் ஆர்.கே நகர் மக்களும் தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க