• Download mobile app
06 Mar 2026, FridayEdition - 3677
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காய்கறி வடை செய்ய…!

November 28, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள் :

உளுந்தம்பருப்பு – 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
கேரட் துருவல் – ஒரு கப்
கோஸ் பொடியாக நறுக்கியது – ஒரு கப்
பச்சைப் பட்டாணி – ஒரு கப்
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 250 மில்லி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, கேரட் துருவல், கோஸ், சோம்பு, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை பட்டாணி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து வடைகளாக தட்டிப் போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சூப்பரான காய்கறி வடை தயார்.

மேலும் படிக்க