• Download mobile app
14 Oct 2025, TuesdayEdition - 3534
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உளுந்தங்கஞ்சி செய்ய…!

November 25, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

உளுந்தம்பருப்பு – ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து)
பச்சரிசி – அரை டம்ளர்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 20 பல்லு
வெல்லம் அல்லது கருப்பட்டி – தேவையான அளவு
தேங்காய் ஒரு மூடி – துருவியது

செய்முறை:

உளுந்தம்பருப்பு (தோலுடன்), பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும். (குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும். அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு உள்ளது. மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்.

இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவேண்டும். தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். சிறிது தேங்காய் துருவியும் போடலாம். சுவையான சத்துள்ள உளுந்தங்கஞ்சி தயார்.

மேலும் படிக்க