November 21, 2017
தண்டோரா குழு
பத்மாவதி படத்தில் ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுமட்டுமின்றி தலையை கொண்டு வந்தால் ரூ.5 கோடி தருவோம் என்றும் அவரை உயிரோடு எரித்தால் 1 கோடி என்றும் என சில மத தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் பலரும் திரையுலகில் தீபிகாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமல் தன்னுடைய ட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “எனக்கு தீபிகாவின் தலை வேண்டும் என்று ஷாக் கொடுத்து இடைவெளிவிட்டு காப்பாற்ற வேண்டும் அவரின் உடலை தாண்டி, சுதந்திரத்தை தாண்டி மரியாதை தரவேண்டும். பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்கமுடியாது” என்று கூறியுள்ளார்.