• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இடம் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி -மாவட்ட ஆட்சியரிடம் புகார்

November 20, 2017 தண்டோரா குழு

கோவையில் இடம் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம்,உக்கடத்தை அடுத்த, GM நகரை சேர்ந்தவர் லக்ஷ்மி.இந்நிலையில் இவர் அழகர் என்பவர் இடம் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து லட்சுமி கூறும்போது,

நான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மகளிர் குழு நடத்தி வருகிறேன். கடந்த 2011-ஆம் ஆண்டு கௌரி என்பவர் மூலம் அழகர்சாமி என்பவர் புளியம்பட்டியில் மாதத்தவனைக்கு இடம் விற்பதாகவும், 2 ¾ சென்ட் 79,000-த்திற்கு வாங்கித்தருவதாகவும் கூறி அலுவலகம் மற்றும் அந்த இடத்திற்கும் அழைத்து சென்றார்.இதில் பலரும் பயனடைய வேண்டும் என பல பேரை இதில் சேர்த்தினேன்.

இந்நிலையில் அனைவரும் பணம் செலுத்தி மாதத்தவணை முடிந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 2016-ஆம்ஆண்டு பத்து நாட்களுக்குள் கிரையம் செய்து தருவதாக கூறிய அழகர்சாமி நபர் ஒன்றுக்கு ரூ24000 பெற்று கொண்டு சென்றார். ஆனால் இதுவரையில் எங்களுக்கு இடம் பதிவுசெய்து தரவில்லை.

மேலும்,இதுகுறித்து அழகர்சமியிடம் கேட்ட போது அவர் எங்களை மிரட்டுகிறார்.இது சம்பந்தமாக காவல் துறையினரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.இதற்கிடையில் நான் குழுவில் சேர்த்தி விட்ட பெண்கள் என்னை தொந்தரவு செய்கின்றனர். எனவே இது சம்பந்தமான மோசடி நபர்களை விசாரித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும் படிக்க