• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னதாகவே துவங்கும் ஒருநாள் போட்டிகள்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு!

November 20, 2017

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் இரண்டு மணி நேரம் முன்னதாக துவங்கும் என பிசிசிஐ., அறிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடக்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் வரும் டிசம்பர் 10ல் துவங்குகிறது.

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் வட இந்தியாவில் அதிகமான குளிர் மற்றும் பனிப்பொலிவு நிலவும் என்பதால், போட்டி வழக்கமான நேரமான மதியம் 1.30 க்கு பதிலாக இரண்டு மணிநேரம் முன்னதாக (11.30 மணி) துவங்கும் என பிசிசிஐ.,இன்று அறிவித்துள்ளது.

இதேபோல வரும் டிசம்பர் 13ல், மொஹாலியில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியும் 11.30 மணிக்கு துவங்கும் என பிசிசிஐ., அறிவித்துள்ளது. ஆனால் டிசம்பர் 17ல் விசாகப்பட்டினத்தில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி வழக்கம் போல மதியம் 1.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க