• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

17 ஆண்டுகளுக்கு பின் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு

November 18, 2017 தண்டோரா குழு

2017ஆம் ஆண்டின் உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனுஷி சில்லார்(20), மருத்துவப் பட்டப் படிப்பை பயின்று வருகிறார். 2017ஆம் ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சீனாவின் சன்யா சிட்டி அரினாவில் 118 நாடுகள் பங்கேற்ற மிஸ் வோல்டு அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில்,வென்று உலக அழகியாக தேர்வு செய்யபட்டுள்ளார். இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்தியர் ஒருவர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.வெற்றி பெற்ற மனுஷி சில்லாருக்கு 2016ஆம் ஆண்டு மிஸ் வோல்டு பட்டம் வென்ற போர்டா ரிகாவின் ஸ்டீபனி டெல் வல்லே, மகுடம் சூட்டி கௌரவித்தார்.

கடந்த 1966ஆம் ஆண்டு வரை எந்தவொரு ஆசியப் பெண்ணும், மிஸ் வோல்டு பட்டம் வென்றதில்லை. இந்நிலையில் அதே ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ரெய்தா ஃபரியா பட்டம் வென்று,புதிய வரலாறு படைத்தார். அதன்பிறகு இந்தியாவின் தலையெழுத்தே மாறியது. 30 ஆண்டுகள் கழித்து, ஐஸ்வர்யா ராய் மிஸ் வோல்டு பட்டம் வென்றார். இவரைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, டயனா ஹைடன் உள்ளிட்டோர் உருவாகினர்.

தற்போது இவர்களது வரிசையில் 67வது மிஸ் வோல்டு பட்டத்தை வென்று மனுஷி சில்லார் சாதித்துள்ளார்.

மேலும் படிக்க