உலகில் முதன் முதலாக தலை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் செர்ஜியோ கனவெரோ கூறியுள்ளார்.
இத்தாலியை சேர்ந்த மருத்துவர் செர்ஜியோ 2017ஆம் ஆண்டுக்குள் தலை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்படும் என்று முன்பு ஊடகங்களுக்கு இவர் சவால் விட்டார். தன் சவாலை நிறைவேற்றும் வகையில் இரண்டு இறந்தவர்களின் உடலை வைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு இச்சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும்,அறுவை சிகிச்சையின் போது மனிதனின் தலையை ஒட்ட வைத்த போது, நரம்புகள், முதுகெலும்பு தண்டு, இரத்த நாளங்கள் இணைக்கப் படுவதற்கான சாத்தியம் இருப்பதை கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ள அவர் விரைவில் மூளைச்சாவு அடைந்த இருவரை வைத்து இந்த அறுவை சிகிச்சையை செய்து பார்க்கப் போவதாகவும் இது மருத்துவ உலகில் பெரும் புரட்சி எனவும் அவர் கூறி உள்ளார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்