November 17, 2017
தண்டோரா குழு
ஜெயலலிதா உயிரோடு இருந்தால் அவரே வியந்து போகும் அளவிற்கு சசிகலா குடும்பத்தினர் ஊழல் செய்து சொத்துக்களை குவித்து இருக்கின்றனர் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழக ஆளுநரின் மேற்பார்வை, தமிழகத்திற்கு ஒரு ஆரோக்கியமான நகர்வு. திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கு இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும். குடியரசு தலைவர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார். ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவர் அல்ல காங்கிரஸில் இருந்து வந்தவர். பா.ஜ.க நேர்மறையாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தி வருகிறது. நிச்சயம் ஆட்சியை பிடிப்போம் என்றார்.
மேலும், ஆளுநரை வைத்து ஆள வேண்டிய அவசியம் இல்லை. கட்டுமான தொழில் , விவசாயம் உள்ளிட்ட விசயங்களில் அத்தியாவசிய நடவடிக்கை எடுக்க மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். தற்போது வருமானத்துறை கைப்பற்றி உள்ள சொத்துகள் விபரத்தை,ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரே வியந்து போயிருப்பார்.அந்த அளவிற்கு சசிகலா குடும்பத்தினர் ஊழல் செய்து இருக்கின்றனர். டிடிவி தினகரன் போலி துணிச்சலுடன் இருக்கிறார். தப்பில்லை என்றால் எதற்காக பதற்றம் அடைய வேண்டும். தமிழகத்தில் அரசியல் தாண்டி தவறு செய்யும் அனைவர்களிடமும் வருமான வரி சோதனைகள் நடைபெற வேண்டும் என்றார்.