November 17, 2017
தண்டோரா குழு
புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான லியோனார்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் சுமார் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.
சுமார் 5௦௦ ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான லியோனார்டோ டா வின்சி வரைந்த ‘சால்வேட்டர் முண்டி’ என்ற இயேசுவின் ஓவியம், நியூயார்க் நகரில் கிறிஸ்டி ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது.ஏலத்தில், அந்த ஓவியம் சுமார் 2941.5 கோடி ரூபாய், அதாவது 450.3 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. அசாதரணமான விலைக்கு இந்த ஓவியம் விற்கப்பட்டதால், மிகவும் விலையுயர்ந்த கலை சேவைக்கான புதிய உலக சாதனையை இந்த ஓவியம் படைத்துள்ளது.
இந்த ஓவியம் கடந்த 2௦15ம் ஆண்டு, சுமார் 1171 கோடி ரூபாய் (179.4 மில்லியன் அமெரிக்க டாலர்)க்கு விற்கப்பட்ட ல்கோ பிகாசோவின் ‘தி விமன் ஆப் ஆல்ஜிசர்ஸ் (The Women of Algiers) ஓவியத்தின் சாதனை முறியடித்து, உலக சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.