November 17, 2017
தண்டோரா குழு
பத்மாவதி படத்தை வெளியிட்டால் போராட்டம் தீவிரமாகும் என ராஜ்புட் ராஷ்டிரிய கர்ணி சேனாவின் அகில இந்திய தலைவர் சுக்தேவ் சிங் கோகா கூறியுள்ளார்.
ராஜ்புட் ராஷ்டிரிய கர்ணி சேனா அமைப்பின் ஆலோசனை கூட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவ்வமைப்பின் அகில இந்திய தலைவர் சுக்தேவ் சிங் கோகா கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்தியா முழுவதும் வரும் டிசம்பர் 1 ம் தேதி முதல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பத்மாவதி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ராணி பத்மாவதியின் வரலாற்றை திரித்து கூறி அரச குடும்பத்தையும், இந்து கலாச்சாரத்தையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. ராணி பத்மாவதியின் வரலாற்றை தவறாக சித்தரிக்கும் பத்மாவதி திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட கூடாது மீறி வெளியிட்டால் போராட்டம் தீவிரமாகும் என கூறினார்.
மேலும், ராணி பத்மாவதி பத்மாவதி குறித்து தவறான கருத்தை ஏற்படுத்தும் இந்த படத்தை மத்திய,மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.