November 16, 2017
தண்டோரா குழு
விவசாயிகளுக்கு கடன்படாதவர் யார்? அவர்கள் குரல் வலுப்பெற செய்யுங்கள் என நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் கட்சி துவங்கும் முனைப்பில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன். சில தினங்களாக களத்துக்கே சென்று மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.கடந்த சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கழிமுகப் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளையும் அவர் சந்தித்து பேசினார்.இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு குரல் சேர்க்க வேண்டும் என நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதாகையை கையில் பிடித்தவாறு வெளியிட்ட பதிவில், விவசாயிகளுக்கு கடன் படாதவர் யார்? அவர்கள் குரல் வலுப்பெறச் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்த பதாகையில் நவம்பர் 20 டெல்லி விரையுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.