November 16, 2017
தண்டோரா குழு
இங்கிலாந்து அரசி எலிசபெத் தனது கணவர் பிலிப்புடன் தங்களது 7௦வது திருமண நாளை கொண்டாடினர்.
லண்டனில் கடந்த 1947ம் ஆண்டு, நவம்பர் 2௦ம் தேதி,இங்கிலாந்து இளவரசி எலிசபெத் கடற்படை அதிகாரி பிலிப்பை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுடைய திருமணவிழாவில் உலகின் பல முக்கிய தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் கலந்துக்கொண்டனர்.
சுமார் 70 ஆண்டுகள் கடந்த பிறகும், தற்போது 91 வயது அரசி எலிசபெத்தும் 96 வயது பிலிப்பும் இன்றுவரை சிறந்த தம்பதியினராகவே வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய 7௦வது திருமண விழாவை,லண்டனில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் எளிய முறையில் கொண்டாடினர். அவர்களுடைய திருமண விழாவை முன்னிட்டு எந்தவித பொது விழா ஏற்பாடு செய்யப்படவில்லை.
கடந்த 1934ம் ஆண்டு, இளவரசர் பிலிப்பின் உறவினர் கிரீஸ் நாட்டின் இளவரசி மரியானா இங்கிலாந்து நாட்டின் பிரபுவாக இருந்த எலிசபெத்தின் மாமாவை திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமண விழாவில் அரசி எலிசபெத்தும் இளவரசர் பிலிப்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். கடந்த 1947ம் ஆண்டு அவர்களுடைய நிச்சியதார்த்தம் முடிந்து 4 மாதங்களுக்கு பிறகு அவர்களுடைய திருமணம் நடைப்பெற்றது.
இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் 65 ஆண்டு ஆட்சி காலத்தில், அவருக்கு துணையாக இளவரசர் பிலிப் இருந்தார். கடந்த 1952ம் ஆண்டு, அரசி எலிசபெத்தின் தந்தை ஜார்ஜ் இறந்த செய்தியையும், அவருக்கு அடுத்து இங்கிலாந்து நாட்டை ஆளப்போகும் அரசி எலிசபெத் என்ற செய்தியை கூறியதும் இளவரசர் பிலிப்.
கடந்த 1997ம் ஆண்டு, தங்களுடைய 5௦வது திருமண விழாவின்போது, அரசி எலிசபெத் தனது கணவருக்கு ஒரு அரிய பரிசு ஒன்றை வழங்கினார். அதோடு, இங்கிலாந்து அரச பரம்பரையில் 6௦வது திருமண விழாவை கொண்டாடிய பெருமை அரசி எலிசபெத்தை சாறும்.