November 16, 2017
தண்டோரா குழு
போப்பாண்டவர் பிரான்சிஸ்க்கு கிடைத்த புது வகையான காரை ஏல நிறுவனம் ஏலம்விடவுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ்க்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய “Lamborghini” வகை கார் ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால்,அந்த காரை அவர் பயன்படுத்த மறுத்துவிட்டார்.
சுமார் 2௦௦,௦௦௦ டாலருக்கு மேலாக விற்கப்படும்,அந்த காரை சொதேபி(Sotheby) ஏல மையத்திடம் அவர் ஒப்படைத்தார்.இதையடுத்து,போப்பாண்டவர் பிரான்சிஸ் அந்த காரின் முன் பகுதியில் கையெழுத்திட்டார்.
அவர் கையெழுத்திட்ட அந்த கார் விற்கப்படும் தொகையை,ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் அளிக்கப்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளை மீண்டும் கட்டவும் மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் மருத்துவ சேவை செய்யும் இரண்டு இத்தாலிய குழுக்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.