November 16, 2017
தண்டோரா குழு
துடிப்பான ஜனநாயத்திற்கு பத்திரிக்கை சுதந்திரம் அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தேசிய பத்திரிக்கையாளர்கள் தினத்தை முன்னிட்டு(நவ 16) இன்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது,
“பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களின் கடின உழைப்பை பாராட்டுகிறேன். ஓய்வில்லாமல் களத்தில் பணியாற்றும் உங்களின் உழைப்புதான் தேசியத்தை கட்டமைக்க உதவும்.தூய்மை இந்தியா திட்டத்தில் ஊடகத்தின் பங்கு மகத்தானது.
சமூகவலைதளங்களில் வளர்ச்சியையும், செல்போன்கள் மூலம் சமீபகாலங்களில் மக்கள் செய்திகளை அறிந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முன்னேற்றம் ஊடகத்தின் தளத்தின் மூலம் ஜனநாயக பங்கேடுப்பை உறுதி செய்யும் எனக் கூறியுள்ளார்.
மேலும், துடிப்பான ஜனநாயகம் அமைய பத்திரிக்கை சுதந்திரம் அவசியம் என்றும் நம் நாட்டு ஊடகங்கள் 125 கோடி மக்களின் திறமை, பலம், திறனை வெளிக்காட்டுவதாக அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.