டெல்லியில் காஷ்மீரீ கேட் அருகே மனநலம் குன்றிய பெண்மணி போக்கிடமின்றி வீதியில் ஆதரவின்றி அலைந்து கொண்டிருந்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மகளிர் பாதுகாப்பு விடுதி நிர்மல் சாயா இவரை அனுமதிக்க மறுத்ததே இதன் காரணம்.
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்டிரின் சிகிச்சைக்காக நிறுவப்பட்ட ஐந்து பாதுகாப்பு மனைகளும் டெல்லியில் உபயோகிக்கப் படாமலேயே உள்ளன. நோயாளிகளை கவனிக்கத் தேவையான வசதிகள் எதுவும் இம்மனைகளில் இல்லை என்பது இதைப் பராமரிப்பவர்களின் வாதம். அதன் விளைவு இத்தகைய நோயாளிகள் வருந்தத்தக்கச் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
மனநிலை குன்றிய பெண்களைப் பராமரிக்கும் பொறுப்பை இன்ஸ்டிடுட் ஆஃப் ஹுமன் பிஹேவியர் & அலைட் சயின்ஸ்(IHBAS) அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமென நிர்மல் சாயா மையம் டெல்லி நீதி மன்றத்தை அணுகியுள்ளது.
தங்களது பொறுப்பு ஆதரவற்ற பெண்களைப் பராமரிப்பது மட்டுமே என்று IHBAS அமைப்பு பதிலளித்துள்ளது.
சமூக நலத்துறை, இந்நிலைப் பெண்களுக்குத் தேவையான வீடுகளைக் கட்டியுள்ளது என்றும், ஆனால் அதற்குத் தேவையான தொழில் நுட்ப வசதிகளை IHBAS இதுவரை செய்து தரவில்லை என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மையம் குற்றம் கூறியுள்ளது.
மன நிலை குன்றிய நபர்களைப் பராமரிக்கும் நிறுவனங்களை அமைக்கும் பொறுப்பு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைச் சேர்ந்ததே என்றும் தெரிவித்துள்ளது.
ஒருவருக்கொருவர் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதனால் துயரம் நோயாளிகளுக்கே.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு