• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி யில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஆதார் கட்டாயம்

November 15, 2017 தண்டோரா குழு

உ.பி யில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் போது ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில்,உ.பி யில் வரும் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வு அனுமதி சீட்டுடன் ஆதார் அட்டை கட்டாயம் தேர்வு அறைக்கு எடுத்து வர வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒருவேளை, தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளுக்கு ஆதார் அட்டை இல்லையென்றால் அதற்கு அந்த கல்விநிலையத்தின் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஏற்க வேண்டும்.ஆள்மாறாட்டத்தை தடுக்கவே ஆதார் அட்டை கட்டாயமாக்கபடுகிறது.

அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க