November 15, 2017
தண்டோரா குழு
சுவிட்சர்லாந்தில் மிக பழமையான வைரம் 215 கோடிக்கு(இந்திய மதிப்பில்) ஏலம் போனது.
சுவிட்சர்லாந்தில் ஜெனிவா நகரிலுள்ள கிறிஸ்டி ஏல மையத்திற்கு வைரம் மற்றும் மரகதம் ஆகியவற்றால் செய்யப்பட்ட நெக்லஸ் ஒன்றில் பதிக்கப்பட்டிருந்த மிக பழமையான வைரம் 215 கோடிக்கு ஏலம் போனது.தீப்பெட்டி அளவில் இருந்த இந்த வைரம், சுமார் 163 காரட் எடையை கொண்டது. மற்றும் உலகின் மிகப்பெரிய மாசற்ற வைரம் இதுவேயாகும்.
இதற்கு முன் பிரான்ஸ் நாட்டை ஆண்ட பதினான்காம் லூயிஸ்,நெப்போலியன் மற்றும் மற்ற பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்கு சொந்தமான 19.5 காரட் எடையுடைய வைரம் 12.5 மில்லியன் ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.