November 14, 2017
தண்டோரா குழு
கோவை வேளாண்மை பல்கலைகழகம் உலக அறிவியல் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று
வேளாண் பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் உலகத்தரம் வாய்ந்த முனைவர் பட்டப்படிப்பு ஆய்வுக் கட்டுரை மற்றும் ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதுவது குறித்த பயிற்சியானது நவ13 2017 அன்று நடைப்பெற்றது.
இப்பயிற்ச்சியானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,முதுகலை பட்டப்படிப்பு,சென்னை வேளாண் மாணவர்கள் சங்கம் மற்றும் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தால் இனணந்து நடத்தப்படுகிறது.இப்பயிற்ச்சியானது நவ 14 முதல் நவ 16 வரை நடைபெறுகிறது.இப்பயிற்ச்சியில் 35 துறைச் சார்ந்த பேராசிரியர்களும்,31 முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் இராமசாமி அவர்கள் பயிற்சிக்
கையெட்டினை வெளியிட பல்கலைக்கழக பதிவாளர் சுதாகர் பெற்றுக் கொண்டார்.